விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கான ஆயத்த பணி கலந்தாய்வு கூட்டம்

52பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர்
தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் 02. 10. 2024. அன்று மகளிர் மட்டும் பங்கேற்கும் " மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதற்கான ஆயத்தப் பணி கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ச. நியூட்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆயத்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளரா மேலிடபொறுப்பாளர் தமிழ்மண் வெளியிட்டு மைய மாநில செயலாளர் பொறுப்பாசிரியர் பூவிழின் கலந்துகொண்டு மது விளக்கை தேசியக் கொள்கையாக அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தும் இம்மாநாடு தேசிய அரசியலின் கவன ஈர்ப்பைப் பெறும்.

அதுமட்டுமல்லாமல், மனித ஆற்றலை பாதுகாக்கும் நோக்கில் இந்திய நிலப்பரப்பில் பெரும் அதிர்வையும் நிகழ்த்த உள்ளதாக மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் பெண்களை திரளாக அழைத்து வர வேண்டுமென பேசினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றியநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி