திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பட்டாபிராமர் திருக்கோவிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் உற்சவர் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் கீழ்பாலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கரகோஷங்கள் முழங்கி பெருமாளை தரிசனம் செய்தனர்.