எருது விடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

80பார்த்தது
செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீரிபாய்ந்தது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

போட்டியின் தூரமான 100 மீட்டர் தொலைவை குறைந்த வினாடியில் கடக்கும் முதல் மூன்று காளைகளின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகின்றது. இந்த எருது விடும் விழாவை காண செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை தழுவ முயன்ற இளைஞர்களை காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

தொடர்புடைய செய்தி