நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு

74பார்த்தது
திருவண்ணாமலை மாநகராட்சி திண்டிவனம் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் அருகே அமைந்துள்ள இடங்கள் நில கையகப்படுத்தப்பட்டு சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்

பேருந்து நிலையத்திற்கு பக்தர்கள் மற்றும் பயணிகள் வருவதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் தானியங்கும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் ப. ஞானவேல், உதவி கோட்ட பொறியாளர்கள் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி