திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெள்ளார் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொன்னாட்டகாரம் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடை பின்புறம் முற்புதரில் பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (வயது 43) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.