திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில்
நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அலுவலகம் முன்பு அரசு மருத்துவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளங்குமணன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுவாமிநாதன், அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்க, டாக்டர் ஜோசி அனைவரையும் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலைஅரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 4 பேராசிரியர்களை (எச்ஒடி) துறை தலைவர்களை அப்பொருப்பிலிருந்து நீக்கியதை கண்டித்தும் அரசு மருத்துவர்களை முதல்வர் பழிவாங்கும் போக்கை கைவிட கோரியும் நடத்து நடத்து மருத்துவர்களை மரியாதையாக நடத்து, முதல்வரே உடைக்காதே உடைக்காதே பூட்டுகளை உடைக்காதே முதல்வராக முதல்வரே நிர்வாக அலுவலகத்தை மரியாதையாக நடத்திடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் ஆர். செந்தில்குமார் அன்பழகன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.