ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்

65பார்த்தது
ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சென்னை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகர மன்றத் தலைவர் ஏ.சி. மணி தலைமை வகித்தார்.

 தொகுதி திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். அன்பழகன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியச் செயலர்கள் துரை மாமது, எம். சுந்தர், மோகன், வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஐ.எஸ்.என். மாலிக் பாஷா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஏ.எச். இப்ராஹிம், சிறுபான்மை அணி அமைப்பாளர் ஏ. அப்சல்பாஷா, கண்ணமங்கலம் செயலர் கோவர்தனன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கே.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து, 25 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி