தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்

52பார்த்தது
கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. 

இந்த வகையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

தொடர்புடைய செய்தி