திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு தங்களது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் எழிலரசனை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் உடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.