திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டி

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டி
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலர் பெ. வள்ளி (பொ) தலைமை வகித்தார். கலைஞர் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் (ஓய்வு) வே. நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளை தொடங்கிவைத்துப் பேசினார். 

தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் 75-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வாசகர்கள் கலந்து கொண்டனர். தமிழ் பேராசிரியர்கள், மூத்த தமிழ் ஆசிரியர்கள் நடுவர் பொறுப்பேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், வாசகர்கள், மைய நூலக அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி