மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செங்கம் நகர பாஜக சார்பில் கட்சி அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வாஜ்பாயி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், செங்கம் நகரத்துக்குள்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை மாவட்ட துணைத் தலைவர் சேகர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணித் தலைவர் ரேணுகா, ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், நகர பொதுச்செயலர் முருகன், நகரச் செயலர் வெங்கடேசன், நகர துணைத் தலைவர் வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.