போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து காய்கறிச் சந்தை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.