அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3. 46 கோடி.

78பார்த்தது
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3. 46 கோடி.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஒரு மாதத்தில் ரூ. 3. 46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை கோயில் இணை ஆணையா் சி. ஜோதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. ஜீவானந்தம் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 341 ரொக்கம், 305 கிராம் தங்கம், 1, 492 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி