கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா

61பார்த்தது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ. வ. வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலினை வெளியிட திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நூல் ஆசிரியர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழுமத்தின் இயக்குனர் ராம், சீதை பதிப்பகத்தின் கௌரா இசை சேகர், திமுக கட்சி நிர்வாகிகள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி