ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

78பார்த்தது
ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் இருதயம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் கே. வேலு, ஜெ. மன்னார்சாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்துவைத்தனர். மேலும், ஆண்டு விழாவில் கவிதை, கட்டுரை, விநாடி வினா, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கே. வேலு, ஜெ. மன்னார்சாமி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். ஆசிரியைகள் புஷ்பா, பசுமதி, மேரிஜாக்குலின், கல்பனா, ஜானகி, பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி