திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரம் போளூர் சட்டமன்ற தொகுதி, போளூர் பேரூராட்சியில் இன்று திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆரணி நகர மன்ற துணைத் தலைவர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி P. பாபு செய்திருந்தார். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.