திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்தின் கீழ், பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மழைக்காலம் வருவதற்குள் வீடுகளை கட்டி முடித்துக் கொள்ள வேண்டும் என்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்ட பணி ஆணை பெற்ற பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அறிவுரை வழங்கினாா்.