திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தனது இரு மகன்களுடன் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தினமான நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
கடந்த 26-ஆம் தேதி நடிகர் தனுஷ் நடித்து வெளியான அவரது 50-ஆவது படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்காகவும், ஆடி கிருத்திகை தினத்தை ஒட்டியும், நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.