தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 3) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி என 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை எச்சரித்துள்ளது.
மேலும், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகலளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.