மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்

73பார்த்தது
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், தசரதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆரணியை அடுத்த காமக்கூர் அரசுப் பள்ளியில் ஆண்கள் கழிப்பறை கட்டடம், பெண்கள் கழிப்பறை கட்டடம் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 16 லட்சத்து 500 நிதி ஒதுக்கியும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டுக்காக தளவாடப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கியும், 

மேலும், குளிர்சாதன இயந்திரம் வாங்குவதற்கும், அலுவலக பயன்பாட்டுக்கு எழுதுபொருள்களை செய்யாறு மகளிர் தொழில் கூட்டுறவு அச்சகத்தில் இருந்து கொள்முதல் செய்வதற்கும், ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேவர் பிளாக் பதிக்கவும், சிமென்ட் கிடங்கு சீரமைத்தல் பணிக்காகவும், இரும்பு கம்பிகள் வைக்கும் புதிய கிடங்கு அமைத்தல் பணிகளுக்கும் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி