தி.மலை: திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

68பார்த்தது
தி.மலை: திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2008-ம் ஆண்டு தமிழகத்தில் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. 

இந்த முன்னோடி முயற்சி மூலம், திருநங்கைகளுக்கு கண்ணியமான வாழ்க்கை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மேலும், திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானியத்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சுயஉதவிக்குழு பயிற்சி, காப்பீட்டுத்திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்க வசதியாக, மாநிலம் முழுவதும் வருவாய்துறை, சுகாதாரதுறை மற்றும் குடும்பநலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்தி