திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி-சேத்துப்பட்டு ரோடு சீனுவாசன் நகரின் முதல் தெருவில் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தெருவில் ஓடுகிறது.
பள்ளமான இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி யாகின்றன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.