திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நயம்பாடி மற்றும் அம்மாபாளையம் ஊராட்சிகளில் புதிதாக நிழற்குடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை அவர்கள், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். உடன், புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் அவர்கள், புதுப்பாளையம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய செயலாளர் கி. ஆறுமுகம் அவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.