திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அங்காள பரமேஸ்வரி பில் மார்க்கெட் தெருவில் உள்ள கற்பகம் 1 என்ற ரேஷன் கடையை வழக்கம் போல் விற்பனை செய்த விற்பனையாளர் விசாலாட்சி நேற்று கடையை மூடி சென்ற பின்பு மாலை 6.30 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. அதனை கண்ட பொதுமக்கள் கடை எரிவதை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.