தி.மலை: கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

61பார்த்தது
தி.மலை: கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ. சி. ரவி தலைமை வகித்தாா். முதல்வா் டி. இளங்கோ முன்னிலை வகித்தாா்.

கருத்தரங்கில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவா்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கினா்.

இதேபோல, வேலூா், காஞ்சிபுரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த குடலவல்லேறு பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். ஒவ்வொரு துறையிலும் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி. பெருவழிதி, எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தின் டாக்டா் பி. ஸ்டாலின், தனி அலுவலா் காா்த்திகேயன், ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி, பாலாஜி, கல்வியியல் கல்லூரி முதல்வா் எச். பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி