2 மணி நேரத்திற்கு மேலாக கோடை கனமழை.

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென 2 மணி நேரம் பெய்த கோடை கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி.போளூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வசூர், குன்னத்தூர், ரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு, வெண்மணி, கரைப்பூண்டி, தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென மாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ய தொடங்கியது.

இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இந்த கோடை மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த திடீர் கோடை மழையால் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் மழையில் நனைந்தபடி பேருந்தில் ஏறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி