திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சி. ஏழுமலை தலைமையில் இன்று பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது உடன் அரசு நலத்திட்ட மாநில செயலாளர் சைதை சங்கர், பாஜக போளூர் முன்னாள் நகர தலைவர் பாண்டியன் முன்னாள் மண்டல தலைவர் கோபி மற்றும் கீழ்பட்டு ஆறுமுகம் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் களம்பூர் ஏழுமலை, ஆரணி சேர்ந்த நித்தியானந்தம் முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் அலமேலு, மாவட்ட துணைத் தலைவர் முருகன் நகர பொது செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரிவு மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் சரவணன், முன்னாள் நகர பொது செயலாளர் முருகன். போளூர் தெற்கு ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் புரட்சி, போளூர் நகர பொது செயலாளர் கோட்டைமேடு ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.