திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வாஜ்பாய் படத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் சி. ஏழுமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் தீனன் தலைமை வகித்தாா். மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ. சங்கா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சதீஷ், நகரத் தலைவா் ஜெகதீஷ், மண்டலத் தலைவா்கள் ராஜேஷ், குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.