சென்னை டி. பி. ஐ. வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட இடைநிலை ஆசிரியர்களை நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்தும், அவர்களை உடனடியாக
விடுதலை செய்யக் கோரியும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.