வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள்!

161பார்த்தது
வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கல்லாயி சொரத்தூர் மற்றும் ஓலைப்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தனித் தனியாக அந்தந்த ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி