திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், கீழக்கொளத்தூர் கிராமத்தில், கால்நடை துறை சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பழங்குடியினருக்கு 100 சதவீத மானியத்தில் கால்நடைகள் வாங்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக எம். எல். ஏ. , ஓ. ஜோதி பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்து, 18 பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக காசோலைகளையும் வழங்கினார்.