திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், கோணலூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் இன்று கால்நடைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி போடுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.