திருவண்ணாமலை: சாலைப் பணியாளா் சங்க நிர்வாகிகள் போராட்டம்

85பார்த்தது
திருவண்ணாமலை: சாலைப் பணியாளா் சங்க நிர்வாகிகள் போராட்டம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். நில அளவைத்துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜா, கோட்டச் செயலா் ஏழமலை, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ரகுபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

போராட்டத்தில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

4000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் பணியிடங்களை பாதுகாத்து, கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி, நிரந்தர பயணப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், மாநில செயற்குழு உறுப்பினா் பரிதிமால்கலைஞன் மற்றும் சங்க நிா்வாகிகள், மாநிலச் செயலா் எம். மகாதேவன், கோட்டப் பொருளாளா் பி. கிருஷ்ணமுா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி