தி.மலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு

24பார்த்தது
தி.மலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினர் கீழ் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி