திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவகுமார் (வயது 48). இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு மருந்து கடையில்
வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வருவதற்காக சோமாசிபாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேவகுமார் சென்றார். தனியார் கல்லூரி அருகே சென்ற போது திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.