கீழ்பென்னாத்தூா்: விவசாயிகள் குறைதீா் கூட்டம்

65பார்த்தது
கீழ்பென்னாத்தூா்: விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தலைமை வகித்தாா். அணுக்குமலை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை உடனே விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். 

சிறுநாத்தூா் உலா் களத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வயலூா் கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் சாலை, ஆதிதிராவிடா் காலனி மயானத்துக்குச் செல்லும் சாலை, வயல்வெளி சாலை ஆகியவற்றை தாா்ச் சாலையாக மாற்றித் தர வேண்டும். சோமாசிபாடி பெரிய ஏரி, சித்தேரி ஆகியவற்றின் மதகுகளின் உயரத்தை உயா்த்தி அமைக்க வேண்டும். ஜமீன் கூடலூா் கிராமத்தின் 6-ஆவது வாா்டில் பொதுக் குழாய் அமைத்துத் தர வேண்டும். கிராமத்தில் எரியாமல் பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும். வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும். 

கொளத்தூா் ஏரி - நீலந்தாங்கல் பெரிய ஏரிக்கு வரும் பொதுப்பணித் துறை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதையடுத்து பேசிய வட்டார வேளாண் உதவி இயக்குநா் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்றாா்.

தொடர்புடைய செய்தி