திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்கதர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்ததை சென்னையிலிருந்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று (31. 12. 2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு. எ. வ. வே. கம்பன், இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குநர் சுதர்ஷன், திருவண்ணாமலை அருணாசலேசுவர் திருக்கோயில் இணை ஆணையர், செயல்அலுவலர் சி. ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா. ஜீவானந்தம் மற்றும் பக்தர்கள், துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.