தி.மலை: அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

78பார்த்தது
தி.மலை: அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் லோகநாதன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வெங்கடேசன், மேலாண்மைக் குழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். நிகழ்வில், பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஆசிரியை சத்தியபாரதி, உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜி, ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி