தேர்தல் அன்று விடுமுறை அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்

82பார்த்தது
தேர்தல் அன்று விடுமுறை அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், ஐடி, ஐடிஸ், பிபிஓ, கடைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஏப். 19-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகாா்களை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சீ. மீனாட்சியை 9710825341 என்ற எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் த. சாந்தியை 952308664 என்ற எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஆ. ஆத்திப்பழத்தை 9442965035 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.