புதிய ரக மணிலா விதை செடிகளை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு!

541பார்த்தது
புதிய ரக மணிலா விதை செடிகளை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்பள்ளிப்பட்டு, பத்தியவாடி, காலூர் மற்றும் சீட்டம்பட்டு கிராமங்களில் பல்வேறு புதியரக மணிலா விதை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விதை செடிகளை திருவண்ணாமலை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விதை பண்ணைகளில் கடைபிடிக்க வேண்டிய விதைச்சான்று நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். ஆய்வின்போது போளூர் விதைச்சான்று அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி விதை அலுவலர்கள் கார்த்திகேயன், கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி