அங்கன்வாடி உதவியாளர் தற்கொலைக்கு முயற்சி

2277பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரிமலைப்பாடி அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி உதவியாளராக கலைவாணி, 46, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சரிவர பணிக்கு செல்வதில்லை என புகார் எழுந்ததன் அடிப்படையில், செங்கம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஏஞ்சன் சாலமன், கடந்த மாதம் இரண்டு முறை ஆய்வுக்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில் கலைவாணி இல்லை. மீண்டும் கடந்த, 31ம் தேதி சென்றபோது அங்கிருந்த கலைவாணியிடம் திட்ட அதிகாரி ஏஞ்சன் சாலமன் விசாரணை நடத்தி அவருக்கு 'மெமோ' கொடுத்தார். இதில், அதிர்ச்சியடைந்த கலைவாணி வீட்டில் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தான் தற்கொலை செய்து கொள்வதாக மாத்திரைகளை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி