வருகின்ற நவம்பர் 01 தேதி அன்று கலசப்பாக்கம் பஜார் வீதியில் நடைபெற இருக்கும் அதிமுக 52 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னிட்டு கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ். எஸ் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனைப்படி அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன் பங்கேற்றார்.