மாவட்ட திட்டக் குழுவின் 5-ஆவது காலாண்டுக் கூட்டம்

66பார்த்தது
மாவட்ட திட்டக் குழுவின் 5-ஆவது காலாண்டுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 5-ஆவது காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழுத் தலைவா் சீ. பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் ஜி. ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், கலைஞா் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ. வ. வேலு எழுதிய கலைஞா் எனும் தாய் என்ற நூலை வெளியிட்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட திட்டக் குழுத் தலைவா் சீ. பாா்வதி சீனுவாசன் பேசியதாவது: வெம்பாக்கம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெம்பாக்கம் ஒன்றிய விவசாயிகளிடம் இருந்து மாவட்ட ஆவின் நிா்வாகமே பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அ. ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ. ராமகிருஷ்ணன், ஆவின் பொது மேலாளா் எல். ரங்கசாமி, தாட்கோ மேலாளா் ஏழுமலை, திட்டக் குழு உறுப்பினா்கள் ஞானசெளந்தரி, மாரிமுத்து, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி