திருவண்ணாமலை அருகே சிலை கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

85பார்த்தது
திருவண்ணாமலை அருகே சிலை கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பத்தில் சிலை கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வன விலங்கு குற்றப்பிரிவினர், கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள மரப்பட்டறையில் டிசம்பர் 22-ம் தேதி நடத்திய சோதனையில் முருகர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 2 சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் இருவரும் ராஜசேகர், வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. 

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட முருகர் சிலையானது நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்றும், இதன் சந்தை மதிப்பு ரூ. 25 கோடி எனவும் கூறப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணர் சிலையானது யானை தந்தத்தால் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ. 30 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட ராஜசேகர், வெங்கடேசன் மற்றும் 2 சுவாமி சிலைகளை திருவண்ணாமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி