திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள தேவனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு நத்தம் பூண்டி அருகே வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வண்டியை தள்ளி சென்ற பொழுது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.