பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை

64பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே மிகப்பழமையான பூத நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெயருக்கு ஏற்ப கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். கிரிவலம் வருபவர்கள் இவரை தரிசித்தால்தான் கிரிவலம் பூர்த்தி ஆகும் என்பதாக ஓர் ஐதிகம் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று புரட்டாசி முதல் சனி கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயணன் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி