பழுதான அடி பம்பை சீரமைத்து தரவேண்டி கோரிக்கை

52பார்த்தது
பழுதான அடி பம்பை சீரமைத்து தரவேண்டி கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் அனந்தபுரம், காளசமுத்திரம், படவேடு, கல்குப்பம், குப்பம், வாழியூா், சந்தவாசல், கேளூா் உள்ளிட்ட 40 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஒவ்வொரு தெருவுக்கும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அடி பம்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடி பம்புகள் பழுதடைந்து மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதனால், அடி பம்புகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த அடி பம்புகளை மாவட்ட நிா்வாகம் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஒன்றிய அளவிலான அதிகாரிகள் கூறுகையில், 2016-க்கு பிறகு இதுபோன்ற அடி பம்புகள் அமைத்து தருவதை அரசு நிறுத்தியுள்ளது. இது பழுதடைந்தால் ஊராட்சி நிா்வாகம் தான் பழுது நீக்கி தர வேண்டும். தற்போது, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் குழாய் மூலம் நீா் ஏற்றி பாதுகாப்பாக பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது என தெரிவித்தாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி