திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே முதலாம் ஆண்டு காளை கன்றுகளுக்கு இடையேயான 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கலந்து கொள்ள சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட கன்றுகளை இளைஞர்கள் வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.
வெற்றி பெறும் கன்றுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரம் முதல் கடைசி பரிசாக ரூ. 2 ஆயிரம் வரை வழங்கப்பட்டன. மேலும் இதில் சிறப்பு பரிசாக ஒரு பெட்டி பீர்பாட்டில்கள் வழங்கப்பட்டன. இதனை இளைஞர்கள் உற்சாகத்துடன் பெற்று சென்றனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.