சாத்தனூர் அணையை தூர் வார வேண்டி எம் பி பேச்சு

85பார்த்தது
சாத்தனூர் அணையை தூர் வார வேண்டி எம் பி பேச்சு
திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை மிகப்பெரிய அணை, தென்பெண்ணை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை கட்டப்படும் பொழுது தூர்வாரப்பட்டது.
அதற்குப் பிறகு இன்னும் தூர்வாரப்படவில்லை.
சாத்தனூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் தான் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களின் தாகத்தை
தீர்க்கிறது.

எனவே ஜல் சக்தி துறை அமைச்சகம் உரிய அதிகாரிகளைக் கொண்டு சாத்தனூர் அணையை தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அதன் காரணமாக நல்ல
குடிதண்ணீர் பைப் மூலமாக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு கிடைக்கும்.

இதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம்
செயல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்தி