திருவண்ணாமலைமாட வீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததற் போதைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் தேரோடும் நான்கு மாடவீதி சாலைகளிலும் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி 2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது 15 கோடி மதிப்பீட்டில் காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரையிலான கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் கூறினார்